‘அரிமா நம்பி’யின் தெலுங்கு ரீமேக்கில் மோகன்பாபு மகன் !!!

Filed under: சினிமா,தமிழகம் |

manchu-vishnu-delivery300விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘அரிமா நம்பி’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் சத்யம், எஸ்கேப், சாந்தி போன்ற தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றுள்ளார். இதுகுறித்த தகவலை அதிகாரபூர்வமாக தெரிவித்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர், தெலுங்கிலும் அவரே இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறினார்.

தனது மகன் மஞ்சு விஷ்ணுவுக்காக இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் மோகன்பாபு, அவரே இந்த படத்தை தயாரிப்பதோடு தமிழில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த அற்புதமான குணசித்திர கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறியுள்ள ஆனந்த் ஷங்கர், தனக்கு தெலுங்கு படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்த மோகன்பாபுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக டுவிட்டரில் கூறியுள்ளார்.

Related posts:

திட்டமிட்டபடி ஆக.24-ல் யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு: மத்திய அரசு!
வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !
"எம்ஜிஆர் எ லைஃப்" - ஆர்.கண்ணன் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *