சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்கள் !

Filed under: இந்தியா,உலகம் |

swiss_national_bankசுவிட்சர்லாந்து: சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 2 இந்திய பெண்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது சுவிட்சர்லார்ந்து அரசு.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம் சாம்பாதித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைப்பது வழக்கம்.

ஆனால் இந்தியா உட்பட பல நாடுகளின் எதிர்ப்பை அடுத்து, தங்கள் நாட்டில் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுமார் 40 பேரின் பெயர் மற்றும் பிறந்த தேதியை வெளியிட்டுள்ளது சுவிட்சர்லாந்து அரசு.

சுவிட்சர்லாந்து நாட்டு அரசிதழில் வெளியிட‌ப்பட்டுள‌ள அ‌ந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளோர் பட்டியலில் 2 இந்தியப் பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. சினேகலதா சாவ்னீ, சங்கீதா சாவ்னீ ஆகிய இந்தியப் பெண்கள் ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பதாக அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், அவர்களது பிறந்த தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதைத் தவிர கூடுதல் விவரங்கள் எதையும் ஸ்விஸ் அரசு வெளியிடவில்லை. மேலும், கூடுதல் விவரங்களைத் வெளியிட வேண்டாம் என அந்தப்பெண்கள் விரும்பினால் 30 நாட்களுக்குள் அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், ஸ்பெயி‌ன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் சேர்ந்த சிலரின் பெயரும் அந்த அரசித‌ழில் வெளியிடப்பட்டுள்ளது.