வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

DSC_0307[5]விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு போட்டியிடுவார் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

நேற்று (திங்கள்கிழமை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று பாமக உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மாற்றம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்பாளர் மாற்றம் தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்ட அறிக்கையில், “எதிர்வரும் 16.05.2016 திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக இரா.ராமமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இப்போது அவருக்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் மாநிலத் தலைவருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க.பாலு உளுந்தூர்பேட்டை தொகுதியின் புதிய வேட்பாளராக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார்.

தேமுதிக – ம.ந.கூட்டணி – தமாகா அணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 104 தொகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்கள் வட மாவட்டங்களில் உள்ளன.

‘விஜயகாந்த் டெபாஸிட் இழப்பார்’

உளுந்தூர்பேட்டையில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் டெபாஸிட் இழப்பார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், உளுந்தூர்பேட்டையில் தனது கட்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காகவே பாமக வேட்பாளர் ராமமூர்த்தி மாற்றப்பட்டு புதிய வேட்பாளராக பாலு களமிறக்கப்பட்டுள்ளதாகவும் ராமதாஸ் கூறினார்.

Related posts:

நாகை மாவட்டத்தில் ‘நான் தான் டாப்பு’ மத்தவனெல்லாம் டூப்பு !!!
புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!
ஜோதிடர் ஷெல்வி கணிப்பு வென்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *