அரையிறுதியில் நுழைந்தது இந்தியா… பச்சை சட்டை கிழிந்தது !

Filed under: விளையாட்டு |

rogit_2346164fஉலகக் கோப்பை போட்டி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. . உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட்

வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வங்கதேச கேப்டன் மோர்டசா வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை, ரோகித்சர்மா பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 75 ரன்களை எட்டிய போது முதல் விக்கெட்டை இழந்தது. 30 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். ரூபல் ஹசன் பந்தில், முஷ்ஃபிகர் ரஹீமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி வெறும் 3 ரன்களே எடுத்தார். அடுத்து வந்த ரஹானேவும் தன் பங்குக்கு 19 ரன்கள் எடுத்த நிலையில், தஷ்கின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் ரோகித்சர்மா 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். ரஹானேவுக்கு பின் சுரேஷ் ரெய்னா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, வங்கதேச அணியின் பந்துவீச்சை பின்னி எடுத்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. ரஹானேவுக்கு பின் சுரேஷ் ரெய்னா, ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்கதேச அணியின் பந்துவீசசை பின்னி எடுத்தது. இதனால் இந்திய அணியின் ரன்வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. 46 பந்துகளில் சுரேஷ் ரெய்னா அரைசதம் கடந்தார். இதில் ஒரு சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அதே வேளையில் ரோகித் சர்மா, 107 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் சதமடித்தார்.

தொடர்ந்து 137 ரன்களில் ரோகித் அவுட் ஆனார். தோனி 6 ரன்களும், ரவீந்தர ஜடேஜா அதிரயாக விளையாடி 22 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களை எடுத்தது இதனையடுத்து வங்கதேச அணி களமிறங்கியது.அந்த அணியின் தொடக்க வீரர் தமிம் இக்பால் 25 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். கேயாஸ் 5 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சவும்யா சர்க்காரும் மக்மதுல்லாவும் இணைந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். எனினும் இந்த ஜோடியும் நிலைக்கவில்லை.மக்மதுல்லா 21 ரன்கள் எடுத்த போது முகமது ஷமி பந்தில் தவானிடம் பிடிகொடுத்தார். ஷிகர் தவான் அற்புதமான முறையில் புத்திசாலித்தனத்துடன் இந்த கேட்சை பிடித்து அசத்தினார். அடுத்து சவும்யா சர்க்காரும் முகமது ஷமி பந்தில் தோனியிடம் பிடிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.