ஆல்ப்ஸ் மலை விமான விபத்து: விமானி திட்டமிட்டே மலையில் மோதியதாக ‘திடுக்’ தகவல்!

Filed under: Uncategory |

பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டியிலிருந்த கிடைத்த தகவலில், துணை பைலட் வேண்டுமென்றே அந்த விமானத்தை மலையில் மோதச் செய்தது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டஸ்ஸல்டார்ப் நகரை நோக்கி சென்ற 4யூ 9525 என்ற பயணிகள் விமானம், பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில் விழுந்து நொறுங்கியது. விமானம் 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன் பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிர தேடுதல் பணியால் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து, உடனடியாக அதை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் துணை பைலட், மற்றொரு விமானி வெளியே சென்றிருந்தபோது, விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கருப்பு பெட்டியில் பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.