ஆஹா கல்யாணம்

Filed under: சினிமா |
IMG_0960ஹிந்தியில்  மிக சிறந்த காதல் படங்களை தொடர்ந்து தயாரித்து வெற்றி வாகை  சூடிய யாஷ் ராஜ் films நிறுவனம் தங்களது முதல் தமிழ் படமான ‘ ஆஹா கல்யாணம் ‘ திரைப்படத்தின்  வெளியீட்டு விழாவை தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில் மிக  பிரம்மாண்டமாக நடத்தினர் . கதாநாயகன் நானியுடன் நாயகி வாணி கபூர் , இயக்குனர் கோகுல் கிருஷ்ணா , இசை அமைப்பாளர் தரன் மற்றும் திரை உலகத்தின் முன்னோடிகள் முன்னிலையில்   விழா விமரிசையாக நடந்தது .
படத்தின் தலைப்புக்கேற்ப இந்த விழாவே ஒரு திருமணம் போலவே  கோலாகாலமாக  நடை பெற்றது. அரங்கம் ஒரு திருமண மேடை போலவே அமைய பெற்றது. அது  மட்டுமின்றி படக்குழுவினர் அனைவரும் சம்பிரதாயமான வேட்டி ,  சட்டை , பட்டு புடவை என விழாவுக்கான உடையில் வந்தோரை வரவேற்றது எல்லோரையும் கவர்ந்தது . இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் , சமுத்திர கனி , தரணி ,  உள்ளிட்டோர்  பாடல்களை வெளியிட்டனர்.  பிரபல பிண்ணனி  பாடகி உஷா உதுப் விழாவில் கலந்து கொண்டு படத்தின்  பாடல்களை சக பிண்ணனி பாடகர்களோடு medley முறையில் , மேடையில் பாடி ஆடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
இயக்குனர் கோகுல் கிருஷ்ணா விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக இருந்து  அவரை விஷ்வர்தன் அறிமுகம்  செய்தது வந்திருந்தோரை  நெகிழ செய்தது.
நாயகி வாணி கபூரை  அறிமுகம் செய்த சிம்ரன் தமிழ் மக்கள்  மிகவும் அன்பானவர்கள் , மிகவும் ஊக்கம்  அளிப்பவர்கள் என்று கூறினார் . குஷ்பூவுக்கு கோயில் கட்டியதோடு அவர் பெயரிலே இட்லி கூட பெயரிடப்பட்டது என கூறிய சிம்ரன் வாணிக்கு  மொளகா பஜ்ஜி என பட்ட பெயர் சூட்டினார். வாணி கபூர்  பேசுகையில் தனக்கு தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ் மக்களையும் மிகவும் பிடித்து இருக்கிறது என கூறினார் . தனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜீத் குமார் என்று கூறிய அவர் பிடித்த நாயகி ஷாலினி அஜித் குமார் என கூறினார் .
நாயகன் நானியை அறிமுகம் செய்த விஜய் சேதுபதி அவர்கள் இடையே உள்ள நட்பை விவரித்து பேசினார் . இயக்குனர் சமுத்திரகனி நானி தமிழ் திரை உலகில் ‘ஆஹா கல்யாணம் ‘ திரை படம் மூலம் நிரந்தர இடம் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.