ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

Filed under: அரசியல்,தமிழகம் |
சத்யபிரத சாஹு IAS

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக, வாக்காளர் களுக்கு மனஅமைதி ஏற்படுத்தும் நோக்கத்துடன், பொதுக்கூட்டங் கள், பேரணிகள் வாயிலாக தேர்தல் பிரச்சாரம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.

அதன்படி, தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், பேரணி ஒருங்கி ணைத்தல், நடத்துதல், பங்கேற் றல், உரையாற்றுவது கூடாது. திரைப்படங்கள், தொலைக்காட்சி கள் அல்லது இத்தகைய ஊடகங் கள் வாயிலாக எந்த ஒரு பொருள் குறித்தும் பொதுமக்களிடம் காட்சிப்படுத்துதல் கூடாது. பொதுமக்களைக் கவரும் நோக் கிலோ, தேர்தல் பிரச்சாரம் செய்யும் வகையிலோ இசை நிகழ்ச்சி, திரை யரங்க நிகழ்ச்சிகள், கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சி களை நடத்துவது, ஏற்பாடு செய் வது கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண் டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபின், நட்சத்திரப் பேச்சாளர்கள், மற்ற அரசியல் தலைவர்கள், செய்தி யாளர்கள் சந்திப்பு மற்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தல் போன்றவற்றில் பங்கேற்று, தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.