கண்ணுக்கு தெரியாத எதிரிகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

233277-narendramodi2பிரதமர் நரேந்திரமோடி கண்ணுக்கு தெரியாத இந்திய எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று கூறி உள்ளாராம். உண்மையில் பல கட்சிகளிலுள்ள இந்திய அறிவாளிகள், பல நாடுகளுடன் ரகசிய தொடர்பு உடையவர்களாக கூறப்படுகிறார்களாம். பல நிகழ்வுகளில் இந்திய அறிவாளிகளின் தலையீட்டின்பேரில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சீனாவை எதிர்த்தால் இந்திய கம்யூனிஸ்ட்டுகளுக்கு கோபத்தை கிளறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். பாகிஸ்தான் மீது கை வைத்தால் இந்திய மத சார்பற்ற கட்சிகளின் கடும் கோபத்தை சந்திக்கவேண்டி வரும் என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இலங்கையை கண்டித்தால் காங்கிரசும், தமிழக பா.ஜ.க.வும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் என்ற கருத்து உலவுகிறது. மொத்தத்தில் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இந்தியாவில் உலவுவதால் இந்திய மக்கள் கலங்குகிறார்கள். இந்திய அறிவாளிகள் மீது இந்திய அரசு ஒரு கண்வைத்து இருப்பது இந்தியநாட்டுக்கு நல்லது என்ற கருத்து பரவலாக உள்ளது.
அதேசமயம் நரேந்திரமோடி விரைவில் தனது மந்திரிசபையை மாற்றி அமைக்க உள்ளாராம். பல அமைச்சர்கள் இதில் கழட்டிவிடப்படலாம் என்ற கருத்து உலவுகிறது. ஊழலுக்கு எதிராக கடும் முயற்சியில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை, கர்நாடக அனந்தகுமார், சதானந்த கௌடா அமைச்சரவையில் தொடர ஆதரிக்குமா? என்ற கேள்வி பிறந்துள்ளது. நரேந்திரமோடியின் வெற்றி பா.ஜ.க.விலுள்ள வெத்துவேட்டுக்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இவர்கள் செய்யும் பில்டப்புகள் இந்திய மக்களை சிரிக்க வைத்துள்ளது.

தமிழக பா.ஜ.க. தலைமை, மறைந்த கோபிநாத்முண்டே மூத்த மகள் விடும் அறிக்கைகள், பா.ஜ.க.வை வளர்த்த தலைவர்களுக்கு அடக்க முடியாத சிரிப்பை தருகிறது.

புகழின் உச்சியிலிருந்த வாஜ்பாய் அவர்களை புறந்தள்ளிவிட்ட சுயநல பா.ஜ.க. அரசியல்வாதிகள் தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளார்கள். கட்சியை வளர்க்கத்தெரியாத பா.ஜ.க. உறுப்பினர்கள், பல மாநிலங்களுக்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது வருந்தத்தக்கது என்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக பாஜ.க. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கவேண்டியது அவசியம். அதிகார ஆணவம் கொண்டு அரசியல் நிர்வாகம் தெரியாத அரசியல்வாதிகள் தங்களைச் சேர்ந்த கட்சிகளுக்கு பெருத்த அவமானங்களை ஏற்படுத்துகிறார்கள் என்று இந்திய அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.