நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதில்தான் மகிழ்ச்சி: கமல்ஹாசன் பெருமிதம் !

Filed under: சினிமா |

kamal_2466739f‘‘நான் பட்டங்களை பெரிதாக எடுத் துக்கொள்வதில்லை. நல்ல நடிகன் என்று பெயர் வாங்குவதில்தான் என் மகிழ்ச்சி இருக்கிறது’’ என்று நடிகர் கமல்ஹாசன் பேசி னார். மலையாளத்தில் மோகன் லால் நடித்த த்ரிஷ்யம் திரைப் படத்தை தழுவி, கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் வெளிவந்திருக் கும் ‘பாபநாசம்’ படத்துக்கு ரசிகர் களிடம் வரவேற்பு கிடைத்துள் ளதை அடுத்து, படக்குழுவினருடன் கமல்ஹாசன் நேற்று பத்திரிகை யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தப் படத்தை தமிழில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நடிகர் மோகன்லால் பரிந்துரைத்ததாக கேள்விப்பட்டேன். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த குழுவினருடன் சேர்ந்து மீண்டும் படம் செய்ய வேண்டும். என்னை நான் ஒரு குழந்தையாக பார்ப்பவன். என்னுடைய பெயர் நடிகன். கமல் என்று சொல்லும்போது யாரையோ சொல்வதாகவே நினைக்கிறேன். நடிகன், கலைஞன் என்று சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. பட்டங்களை எல்லாம் நூல் கட்டாமலேயே பறக்கும் பட்டங்களாகவே பார்க்கிறேன். மற்றபடி அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நல்ல நடிகன் என்று பெயர் வாங்கும்போது கிடைக்கும் சந்தோஷம்தான் எனக்கு வேண் டும். சினிமாவை பொறுத்தவரைக் கும் மொழி கிடையாது. அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர் நமக்கு கிடைத்திருக்க மாட்டார். திற மையை மட்டும்தான் பார்க்க வேண்டும். சினிமாவில் தமிழ், மலை யாளம் என்பது எல்லாம் விலாசம் மட்டுமே. அது திறமையாகாது. கலையில் மட்டும்தான் ஜாதி, மொழி, மதம் இருப்பதில்லை. நடிகர் சங்கம் விவகாரம் தொடர் பாக அறிவுரை கேட்டால் சொல் வதற்கு தயாராகவே இருக்கிறேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.