நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம்: மக்களவையில் மசோதா நிறைவேறியது ,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு !

Filed under: இந்தியா |

loksabha2_2336830fநிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா 2 நாள் விவாதத் துக்கு பிறகு மக்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தன. மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. மொத்தம் 9 திருத்தங்களை மக்களவை ஏற்றுக்கொண்டது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாஜகவின் கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, அகாலி தளம் ஆகியவை மவுனம் காத்து வந்தன. இந்நிலையில், அரசின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு தங்கள் எதிர்ப்பை கைவிட்டன. என்றாலும், சிவசேனா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர் சிங் மசோதா மீது பேசும்போது, “எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் திருத்தங்கள் விவசாயிகள் நலனுக் கானவை என்றால் அவற்றை ஏற்கத் தயார்” என்றார்.

அதிமுக ஆதரவு

மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகியவை வெளிநடப்பு செய்தன. தமிழக ஆளும் கட்சியான அதிமுக, மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்வபிமானி பக் ஷா கொண்டுவந்த திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்யும் வகையில் 9 திருத்தங் களையும் 2 புதிய பிரிவுகளையும் மத்திய அரசு சேர்த்தது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த 52 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.

முன்னதாக மசோதாவில் திருத்தங்கள் செய்வோம் என்று உறுதியளித்து கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பாஜக கேட்டது.

மக்களவையில் ஆளும் கூட்ட ணிக்கு பெரும்பான்மை இருப் பதால் மசோதா எளிதாக நிறை வேறியது. மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் பிற கட்சிகளின் ஆதரவை கோரி யுள்ளது. நிலம் கொடுக்கும் விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை கொடுப்பது, மாவட்ட அளவில் குறைதீர்ப்பு வசதி, குறைந்த பட்ச அளவு நிலம் கையகப் படுத்துவது ஆகியவை இந்தத் திருத்தங்களில் அடங்கும்.

முன்னதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வீரேந்திர் சிங் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களிடம் நில மசோதா மற்றும் அரசு கொண்டு வரும் திருத்தங்கள் தொடர்பான சந்தேகம், குறைகளுக்கு விளக்கம் அளித்தனர்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கவலை களை தீர்க்க நில மசோதாவில் திருத்தங்களை சேர்க்க அரசு தயாராக இருப்பதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வீரேந்திர் சிங் கூறியதாவது:

அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் என சமூகத்தின் சகல பிரிவினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தி இந்தத் திருத்தங்களை கொண்டு வந்துள் ளோம். விவசாயிகள், விவசாயத் தொழிலின் நலன் கருதி மேலும் யோசனைகளை தெரிவித்தால், அதை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் மேம்பாடு தொடர்வதையும் பார்க்கவேண்டும்” என்றார்.

நில மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்யும்போது இரு அவைகளிலும் நாள் முழுவதும் கட்டாயம் இருக்கவேண்டும் என பாஜக தனது எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருந்தது.