புது ஃபார்முலாவில் எம்.பி. தேர்தலை சந்திக்கப்போகும் திராவிட கட்சிகள்!

Filed under: அரசியல்,இந்தியா |

15TH_CITY_PARLIAME_1144100fநடந்து முடிந்த நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சியை பெரிதும் தளர்த்தி உள்ளது. காரணம் ராஜஸ்தான் மாநிலம், டெல்லி இரண்டும் கைவிட்டுபோனதில் தலைமை அதிர்ந்துள்ளதாம். மேலும் டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் ஆணவத்தை அதிரவைத்துள்ளது உண்மை என்கிறார்கள். வடமாநில மக்களின் ஊழலுக்கும், திறமை இன்மைக்கும் எதிரான எழுச்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை திணற வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக ராகுல் காந்தியின் அரசியல் எழுச்சி எதிர்காலத்தில் கேள்விக்குரியாக உள்ளதாகக் கூறுகிறார்கள். மேலும் பிரதம மந்திரியின் நிர்வாகத்திறன் குறைந்த காரணம் மத்திய அரசு ஊழியர்களை அதிகம் பாதித்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள்.
வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரசின் வடக்கு, மேற்கு மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் தயங்க ஆரம்பித்துள்ளனர். ஒருபுறம் மோடியின் எழுச்சி, மறுபக்கம் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு என்ற வெளிப்பாடு பாராளுமன்ற உறுப்பினர்களை மிகவும் பாதித்துள்ளதாம். மோடியின் கவர்ச்சி மேற்கு மாநிலங்களை அதிகம் கவரவில்லை என்கிறார்கள். குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் மிகவும் கஷ்டப்பட்டு வெற்றிபெற்றதை உதாரணம் காட்டுகிறார்கள்.
இலங்கை அரசு இந்திய அரசின்மீது அதிக கோபம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். காரணம் இலங்கை தமிழர்களை காக்கச் சென்ற இந்திய அமைதி பாதுகாப்புப்படை இலங்கையில் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தமிழர்களை மானபங்கப்படுத்தி, கொன்று குவித்ததாக சிங்களர்கள் புலம்புகிறார்களாம். மேலும் சிங்கள மீனவர்கள் அதிகம் மேற்கு வங்க எல்லையில் சிறை பிடிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாமல் இருப்பதாக சிங்கள கப்பல்படை கூறுகிறதாம். இதனால் சிங்களர்கள் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் பழிதீர்த்து கொள்வதாக கிசுகிசுக்கிறார்கள்.
தமிழகத்தில் போணியாகாத காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு மேற்கு வங்க அரசின் பிரச்னையில் தலையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கை தமிழர்களை காரணம் காட்டி, அரசியல் நடத்தும் தமிழக தேசிய கட்சிகள் மற்றும் தமிழிக சுயநல அரசியல்வாதிகள் இலங்கைக்கு மத்திய அரசு கப்பல் படையை அனுப்ப தடைவிதிக்கிறார்களாம். தமிழின துரோகிகளின் ஆதரவை கண்ட இலங்கை அதிபர், இலங்கை வடக்கு மாகாணங்களிலுள்ள ராணுவத்தை விலக்க கடுமையாக மறுக்கிறாராம்.
இந்தியாவை காட்டிக்கொடுத்த அமெரிக்க ஆதரவு இந்திய அறிவுஜீவிகள், தற்போது இந்திய வெளிநாட்டு தூதரின் அவமானத்தைக்கண்டு அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசமுடியாமல் தவிக்கிறார்களாம். அமெரிக்காவும் இந்திய துரோகிகளான அமெரிக்க ஆதரவு இந்திய அறிவுஜீவிகளை நம்பி தற்போது ஆப்பில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. அதேபோல் தமிழக துரோகிகளான தமிழக அறிவுஜீவிகளையும், தமிழக சுயநல அரசியல்வாதிகளையும் வெகுவாக நம்பிய இலங்கை அதிபர், இந்திய மக்களின் அமெரிக்காவிற்கு எதிரான எழுச்சியை கண்டு அலறுகிறாராம். காரணம் நாளைய இந்திய மக்களின் தமிழக ஆதரவு எழுச்சி, இலங்கை அதிபரின் பதவியை பறித்து ஓடச்செய்யும் நிலையை ஏற்படுத்தும் என்ற பயம் எழுந்துள்ளதாம்.
தமிழகம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலை வித்தியாசமாக சந்திக்கப்போவதாக உலக அரசியல் வல்லுநர்கள் கணிக்கிறார்கள். இரு தேசிய கட்சிகளும் கூட்டணிக்கு கட்சி இல்லாமல் தவிப்பதை ரசிக்கிறார்களாம். தமிழக கட்சிகளான தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்றவைகள் தமிழக புரட்சித்தலைவியின் எழுச்சியைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்கள். இலங்கை பிரச்னையை வைத்து இவர்கள் நடத்திய அரசியல் நாடகம் தமிழக மக்களால் பொழுதுபோக்காக ரசிக்கப்பட்டதாம். தமிழக அறிவு ஜீவிகள் தமிழக முதல்வரை பா.ஜ.க.வுடன் இணைக்க செய்த லீலைகள் பிசுபிசுத்துப்போய் விட்டதாக கூறப்படுகின்றன.
நரேந்திரமோடி, ராகுல்காந்தி போன்ற தலைவர்கள் தமிழக மக்களுக்கு காட்சிப் பொருள்களாக தெரிவதாக கூறப்படுகிறது. இலங்கை பிரச்னையில் பா.ஜ.க. போடும் இரட்டைவேடம் தமிழக மக்களுக்கு எரிச்சலை கிளப்புவதாகக் கூறப்படுகிறது. இலங்கை பிரச்னை தீர ஒரே வழி இந்திய கப்பல்படை உடனடியாக இலங்கையிலுள்ள இந்திய எல்லைகளில் ரோந்து அதிகரிக்க வேண்டும் என்பது இந்திய உளவுத்துறையின் வேண்டுகோளாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், தமிழக புரட்சித்தலைவியின் ஆட்சியில் இலங்கை பிரச்னை தீர்க்கப்படுமானால் உலக அரசியலில் தமிழக முதல்வர் உயர்ந்து விடுவார் என்ற காழ்ப்புணர்ச்சி தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், தேசிய கட்சி தலைவர்களுக்கும் உள்ளது என்பது சுட்டெரிக்கும் உண்மை. இதை புரிந்து கொண்ட தமிழக மக்கள் அமைதியாக பாராளுமன்ற தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.