புயல், வறட்சி நிவாரணப் பணிகளுக்கு ரூ.62,136 கோடி வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் வலியுறுத்தல் !

Filed under: சென்னை,தமிழகம் |

தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். மேலும் ‘வார்தா’ புயல் மற்றும் வறட்சி நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரி யுள்ள ரூ.62,136 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை சட்டப்பேரவை தலைவர் பி.தனபால், பேரவைச் செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று அவைக்குள் அழைத்து வந்தனர். அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தின் மாபெரும் தலை வராக திகழ்ந்த ஜெயலலிதா காட் டிய வழியில் தமிழகத்தை முதல் மாநிலமாக உருவாக்க தொடர்ந்து பாடுபட வேண்டும். நீர் ஆதார மேலாண்மை, ஏழைகளுக்கு வீட்டு வசதி, வறுமை ஒழிப்பு, திறன் மேம்பாடு மற்றும் பொது சுகாதாரம் என்ற 5 இயக்கங்களையும்11 பெருந்திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

மத்திய வரி பகிர்வில் ஏற்பட் டுள்ள பாதிப்பை சரிசெய்ய சிறப் பினமாக ரூ.2 ஆயிரம் கோடியை இந்த நிதிக்குழு காலத்தில் தமிழகத் துக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் நிதி உதவி பெறும் திட்டங் களுக்கான மத்திய அரசின் பங்கை 60-ல் இருந்து 90 சதவீதமாக உயர்த்த வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் இயல்பான வளர்ச்சி அடிப்படையில் மத்திய அரசு வழங்கும் நிதி தொடர வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச் சினைக்கு தீர்வு காணும் விதமாக கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். வார்தா புயலால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிக மறு சீரமைப்பு செய்ய ரூ.1,971 கோடியே 89 லட்சத்தை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும், நிரந்தர கட்டுமான பணிக்காக ரூ.20,600 கோடியே 37 லட்சமும் வழங்க கோரி தமிழக அரசு அளித்த மனுவை உடனடியாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

தமிழகத்தில் 140 ஆண்டுகளில் கண்டிராத வறட்சி ஏற்பட்டுள்ளது. கடும் வறட்சி என அறிவித்து பயி ரிழப்பு, இதர நிவாரணப் பணி களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.39,565 கோடி வழங்க அரசு கோரியுள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

மரம் நடும் திட்டம்

‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தீர்க்க, அரசு மற்றும் தனியார் நிலங்களில் மரம் நடு வதை ஊக்கப்படுத்த மாபெரும் பசுமைத் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது. இந்த மரம் நடும் பெரும் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ல் தொடங்கப்படும்.

அமைதிப் பூங்கா

தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

சிறுதானியங்கள், பயறு, எண் ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்க, ரூ.803 கோடியில் நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது. மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக ஒரு கோடி மெட்ரிக் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது.

ஸ்மார்ட் கார்டு

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாகவும் வெளிப் படைத் தன்மையுடனும் செயல் படுத்த அதன் செயலாக்கங்கள் முழுமையாக கணினிமயமாக்கப் பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக குடும்ப அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டை கள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும்.

தமிழகத்தில் கூடுதலாக 13 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் சூளுரையை நிறைவேற்ற, நிலுவையில் உள்ள மின் திட்டங்கள் விரைவுபடுத் தப்படுகிறது. புதிய திட்டங்களும் தொடங்கப்படுகின்றன. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த வீட்டு இணைப்பு நுகர் வோருக்கு 100 யூனிட், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு கிராமப்புறங் களில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 619 வீடுகளும், நகர்ப்புறங்களில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 343 வீடு களும் கட்டப்பட உள்ளன. சென்னை மெட்ரோ ரயில் திட்டத் தின் 2-ம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக் கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது.

முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மாநாட்டை நடத்த அரசு ஆயத்தமாகி வரு கிறது. மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழகத்தில் பின்பற்றப்படும் வெளிப்படையான சேர்க்கை முறையை தொடர்ந்து பின்பற்ற அரசு முயற்சி எடுக்கும்.

இவ்வாறு ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.