ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரவாத பணம்!

Filed under: அரசியல்,இந்தியா |

233277-narendramodi2நரேந்திர மோடி அரசின் முதல் நிதியாண்டு பட்ஜெட் பெரிய சலுகைகளை அளிக்க முன்வராது என்ற கருத்து உலவுகிறது. சென்ற மத்திய அரசின் பொருளாதார உயர்வு நடவடிக்கைகளை வேறுவழியின்றி கசப்பு உணர்வுடன் பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள். உண்மையில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமான தொகுதி மக்களுக்கு உயர்வை கொடுக்கும் திட்டம் என்ற கருத்து உலவுகிறது. தற்போது உள்ள ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சம் மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறார்கள்.
மத்திய அரசு தேவையற்ற திட்டங்களுக்கு செலவழிக்கும் நிதிகளை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்து செயல்பட்டால், உண்மையில் இந்திய கிராமங்கள் வளர்ச்சி அடைவது உறுதி. மாநில அரசு, தொகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள், கிராம அதிகாரிகள் கொண்ட அமைப்புகள் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுகிறது. மேலும் உறுப்பினர் சேர்ந்த கட்சி தொண்டர்கள் தொகுதி முழுவதும் பரவி உள்ளதால் தொகுதியின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். சென்ற ஆட்சியில் உறுப்பினர்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்த காங்கிரஸ் தலைமை, மேம்பாட்டு நிதியை உயர்த்த மறுத்தது. அதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ஜால்ரா அடித்ததாக கிண்டலடிக்கிறார்களாம்.
தற்போது புதிய தீவிரவாதம் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரியல் எஸ்டேட் என்ற போர்வையில் வெளிநாட்டு தீவிரவாத நிதிகள் இந்தியாவில் நுழைந்து தரமற்ற பாதுகாப்பற்ற கட்டிடங்களை கட்டி இந்திய உயிர்களுக்கு கேடு விளைவிக்க திட்டமிட்டு இருப்பதாக ரகசிய தகவல்கள் அமெரிக்காவில் வெளியாகி உள்ளது. படித்த இளைஞர்களை ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கவைத்து, மூளை சலவைச் செய்து, மாநில அதிகாரிகளை நிதிகளுக்கு அடிமையாக்கி, தரமற்ற பொருட்களை கொண்டு வானுயர கட்டிடங்கள் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்களாம்.
சமீபகாலமாக கட்டப்படும் இந்த கட்டிடங்களின் ஆயுள் குறைந்தது 10 ஆண்டுகள்தான் இருக்கும் என்று அடித்துக்கூறுகிறார்கள். தமிழகத்தில் ஏற்பட்ட கட்டிட இடிப்பு, தீவிரவாத செயல்களின் எடுத்துக்காட்டாக இருக்கலாம் என்ற கோணத்தில் அலசப்படலாம் என்கிறார்கள். தமிழக அரசு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடும் அனைத்து வகையினரையும் சிறப்பு ஆணைப்படி கண்காணிக்க குழு அமைப்பது அவசியம் என்ற கருத்து தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
தமிழக காங்கிரசின் புதிய தலைவரை நியமிக்க புதிய பட்டிமன்றம் தலைநகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் நிதி அமைச்சர், தற்போதைய தலைவர் மற்றும் ராகுல்காந்தியின் இளைய வட்டம் என்று அலசப்பட்டதாம். மொத்தத்தில் தலைவர் மூப்பனார் ஆதரவாளர்களை அகற்றினால், காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட கழகத்தில் இணையும் வாய்ப்பை அளிக்கும் என்ற கருத்து உலவுகிறது. உண்மையில் தமிழகத்தில் காங்கிரஸ் 12 சதவீத ஆதரவுடன் இருந்தது. சோனியாகாந்தியின் தமிழக ஆதரவு என்ற போர்வையில் செயல்பட்ட செல்லாக்காசு தலைவர்கள், ராகுல்காந்தி பேரைச் சொல்லி பில்ட் அப் செய்த அரசியல்வாதிகள் தமிழக காங்கிரசை தமிழக அரசியலிலிருந்து அகற்றிவிட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க.வில் தெலுங்கு மொழி பேசினால் உயர்வு கிட்டும் என்ற கருத்து உலவுகிறது. அதேபோல் காங்கிரசில் ஆங்கிலம், இந்தி தெரிந்த மொக்கை அரசியல்வாதிகள் டெல்லியினால் உயர்த்தப்பட்டு, தமிழக காங்கிரசை அடியோடு ஒழித்துவிட்டதாக உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் புலம்புகிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க. மீண்டும் எழுமா? என்ற கேள்விக்குறி பெரிதாக எழுந்துள்ளதாம். தி.மு.க. தலைமையின் குடும்ப அரசியலை புரிந்து கொண்ட உண்மையான பச்சை தமிழர்களான தி.மு.க. உடன்பிறப்புகள், தமிழக புரட்சித்தலைவிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார்களாம். பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட தி.மு.க. குடும்பத்தினரின் கட்சிபிடிப்பு தற்போது தளர்ந்துள்ளது என்பது சுட்டெரிக்கும் உண்மை. அதேபோல் நிதியை குறிக்கோளாக கொண்டு, குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கேப்டன் தன்னுடைய கட்சிபிடிப்பை தளரவிட்டு விட்டார் என்ற கருத்து உலவுகிறது.