வக்ரபுத்தி அரசியல்வாதிகள் !

Filed under: அரசியல்,இந்தியா |

mufti1-U191524533921bSH--621x414@LiveMintநாகரீகம் வளர, வளர, அறிவு முதிர்ச்சி பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வக்ரபுத்திதான் அதிகம் தற்போதைய மக்களுக்கு உண்டாகி இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். முதலில் பா.ஜ.க. தமிழக தலைவர் முன்னாள் இலங்கை அதிபருக்கு இந்திய குறிப்பாக தமிழக படகுகளை பிடித்துவைக்க ஆலோசனை கூறி தொடங்கி வைத்ததாகக் கூறுகிறார்கள்.

தற்போது ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர், காஷ்மீர் தேர்தலுக்கு பாகிஸ்தானுக்கும் பாக் தீவிரவாதிகளுக்கும் நன்றி கூறியுள்ளாராம். காரணம் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மறுபடியும் தீவிரவாதிகள் கடத்தி சென்றால், நரேந்திரமோடி காப்பாற்ற பாகிஸ்தான் தீவிரவாதியை இந்தியாவிலிருந்து விடுவிக்கமாட்டார் என்று அறிந்திருப்பதுதான் என்கிறார்கள். காஷ்மீரத்தில் பா.ஜ.க.வை எதிர்த்து, முக்தி முகம்மதை ஆதரித்த மதசார்பற்ற தன்மையை ஆதரிக்கும் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும், மனதுக்குள் பாகிஸ்தானை ஆதரிப்பதாக கருதப்படுகிறதாம்.
இந்துக்களுக்கு எதிராக எந்த ஒரு நிகழ்ச்சி நடந்தாலும், அதில் கை கோர்த்து மகிழ்ச்சியுடன் செயல்படும் கட்சிகளாக மதசார்பற்ற தன்மையுள்ள அரசியல் கட்சிகள் திகழ்வதாக குற்றம் சாட்டுகிறார்கள். வக்ரபுத்தியின் உச்சகட்டமாக ஆங்கில தொலைக்காட்சி, கற்பழிப்பு வழக்கில் சிக்கிய குற்றவாளியை பேட்டிக்கண்டது. அதில் குற்றவாளி! கற்பழிக்கப்படும்போது, பெண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்ற மனப்பான்மையை அறிவுறுத்தி பேட்டி கொடுத்ததாக கூறுகிறார்கள். பெண்களின் உரிமைகளை தோள்தட்டி, மார்தட்டி வீராவேசம் கொண்டு ஆட்டம் போடும் அரசியல் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதிகாத்து வருவதாக கூறப்படுகின்றன.
அடுத்தது பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருக்கும் ஆந்திர தலைவர், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக்குடியுரிமை வழங்கக்கூடாது என்ற வக்ர புத்தியை வெளிப்படுத்தினாராம். வங்க அகதிகளுக்கும், பாகிஸ்தான் அகதிகளுக்கும் ஓட்டு வங்கிக்காக இந்திய குடியுரிமை போட்டி போட்டுக்கொண்டு வழங்கிய காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள், இந்திய ரத்தங்களான ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக பா.ஜ.க. கண்டிக்காமல் அமைதி காத்து, தமிழக விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளதாக தமிழ்குலம் கடும் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது.

மேலும் தக்க தருணம் கிடைத்தால் தமிழர்களை அழிக்க, காங்கிரசும், பா.ஜ.க.வும் கைகோர்த்து செயல்படக்கூடும் என்ற எச்சரிக்கையை தமிழ் உலகம் எடுத்துக் காட்டுகிறதாம். வக்ரபுத்திகள் தற்போது புதிய அவதாரம் எடுத்து அறிவாளிகள் மூலம் இந்திய மக்களை ஆட்டிப்படைப்பதாக கூறுகிறார்கள். தொலைக்காட்சிகளில் ஆணவத்துடன் இந்திய மக்களை பிரித்து மதக்கலவரங்கள் உருவாகும் வண்ணம் அறிக்கைகள் விடும் அரசியல்வாதிகளின் வக்ரபுத்தி இந்திய மக்களால் வன்மையாக கண்டிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.

இந்திய வரவு செலவுகளை திட்டமிட்டு செயலாற்ற ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு பட்ஜெட்டாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட் இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவுகளையும் பல மாதங்களாக சந்தித்து, அவர்களுடைய வேண்டுகோளை பரிசீலித்து நிதித்திட்டங்களை நிதித்துறை அதிகாரிகள் திட்டமிடுவது வழக்கம். சில திட்டங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தீட்டுவது நடைமுறை. அதை செயலாற்றவும் பல கட்சி தலைவர்களையும், நிதி ஆலோசகர்களையும் கலந்து ஆலோசித்து திட்டமிடுகிறார்கள் என்பதே உண்மை.
ஆனால் பட்ஜெட் வெளியான பின்பு ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பட்ஜெட்டை பற்றிய விவாதங்கள் நடத்துவது கேலிக்குரியதாக கூறப்படுகிறது. பட்ஜெட் நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு, (பேட்டி தரும் அறிவாளிகள் தங்கள் நிதி அறிவினை அரசுக்கு தெரிவிக்காமல், பட்ஜெட் வெளியான பின், தொலைக்காட்சிகளில் வரவேற்று, எதிர்த்து நாடகமாடுவதை இந்திய மக்கள் கிண்டலடிக்கிறார்கள். காரணம் இந்திய நிதி அறியாமைக்குக் கப்பம் கட்டும் அப்பாவிகள் இந்திய மக்களே என்பது சுட்டெரிக்கும் உண்மை.