வீரம் படப்பிடிப்பு முடிந்தது!!!

Filed under: சினிமா |
IMG_9025_p1மிகவும் எதிர்பார்க்கப்படும் , பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்தத மகிழ்ச்சியும் , முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது. 
 
குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.’ அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம் என்று கூறி பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி ஆகியோர்.
Movie Gallery