61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

Filed under: தமிழகம் |

சென்னை: தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர்.  இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் உள்ள விவரம் வருமாறு, மதுரை போக்குவரத்து துறை துணை கமிஷனர் பாலகோபாலன் தூத்துக்குடி எஸ்.பி.,யாக, மயிலாப்பூர் மயில்வாகனன் – போக்குவரத்து துறைக்கும், திருவள்ளூர் எஸ்பி – பொன்னி, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், நாகை எஸ்.பி., விஜயகுமார் சிபிசிஐடி., பிரிவுக்கும் , கடலூர் எஸ்பி சரவணன் சிபிசிஐடி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்.பி.,யான சண்முகபிரியா சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கும், மாற்றப்பட்டுள்ளனர்.  சென்னை நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக சுதாகரன், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக, முத்துசாமி, நாகை எஸ்.பி.,யாக ராஜசேகரன், கரூர் எஸ்.பி,யாக பாண்டிய ராஜன் , சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக நாகஜோதி, காஞ்சிபுரம் எஸ்.பி.,யாக கண்ணன், நில அபகரிப்பு கண்காணிப்பு எஸ்.பியாக கண்ணம்மாள், சிவகங்கை எஸ்.பி.,யாக ரோகித் நாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts:

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை: கோட்டையில் இன்று 15 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை !
ராஜீவ் கொலை வழக்கு: 5 நீதிபதிகள் அமர்வு ஜூலை 15-ல் விசாரணை !
கள்ளக்குறிச்சி மாணவிகள் தற்கொலை விவகாரம்: தனியார் சித்த மருத்துவக் கல்லூரிக்கு சீல் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *