Home » Archives by category » அரசியல் (Page 3)

கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

Comments Off on கார்த்தி சிதம்பரம் மனைவி பிரசாரத்திற்கு தடை?

கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சேவியர் தாஸ், பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் நான்கு கட்சிகளுமே மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரமும் […]

Continue reading …

தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

Comments Off on தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?

ரூ.1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி அன்று நாடு முழுதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் […]

Continue reading …

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

Comments Off on இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம்!

இன்று சென்னையில் இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணமாகி அதன் பிறகு விவாகரத்து பெற்றார். தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண […]

Continue reading …

தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

Comments Off on தேர்தலன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் நாளன்று தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “வாக்குப்பதிவு அன்று காட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Continue reading …

திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

Comments Off on திமுக வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு அதிரடி உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் “மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களுக்கு முன் அனுமதி கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி […]

Continue reading …

புவிசார் குறியீடு குறித்து ராதிகா சரத்குமார் பேச்சு!

Comments Off on புவிசார் குறியீடு குறித்து ராதிகா சரத்குமார் பேச்சு!

பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். விருதுநகரின் ஊரகப்பகுதிகளான பெரியபேராலி, சின்ன பேராலி, பாண்டியன்நகர், ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில், “நாடுமுழுவதும் பாஜக தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். வெற்றிபெறும் கட்சியின் பிரதிநிதியை மக்கள் தேர்ந்தெடுத்தால் எல்லா மக்கள் நலத்திட்டங்களும் எளிமையாக மக்களை வந்தடையும் வளம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இடைத்தரகரே இல்லாமல் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]

Continue reading …

கவிதா ஆவேசம்!

Comments Off on கவிதா ஆவேசம்!

தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் “இது சிபிஐ கஸ்டடி அல்ல பாஜக கஸ்டடி” என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார். கவிதா கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட காவலில் எடுத்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின் அவர் டில்லி திகார் திரையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்று மீண்டும் அவர் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருடைய காவல் ஏப்ரல் […]

Continue reading …

பிரச்சாரத்திற்கு 1 மணி நேரம் நீட்டிப்பு!

Comments Off on பிரச்சாரத்திற்கு 1 மணி நேரம் நீட்டிப்பு!

தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி பிரச்சாரத்திற்கு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும், மாலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Continue reading …

கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

Comments Off on கெஜ்ரிவாலின் காவல் நீட்டிப்பு!

ஏப்ரல் 23ம் தேதி வரை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக 9 முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் இருந்தார். இது தொடர்பாக அவர் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் […]

Continue reading …

32வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

Comments Off on 32வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஏப்ரல் 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் […]

Continue reading …