Home » Archives by category » அரசியல் (Page 8)

தமிழ் புலிகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது!

Comments Off on தமிழ் புலிகள் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது!

50க்கும் மேற்பட்ட அருந்தியினர் சமுதாய மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.நடுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர கோரியும் மாவட்ட நிர்வாகத்திடமும், உசிலம்பட்டி வருவாய்த்துறையினரிடமும் பலமுறை மனு அளித்து முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இன்று பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் […]

Continue reading …

தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது: கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்!

Comments Off on தமிழகத்துக்குத் தண்ணீர் கிடையாது: கர்நாடக துணை முதலமைச்சர் திட்டவட்டம்!

கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து […]

Continue reading …

பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Comments Off on பொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

சபாநாயகர் அப்பாவு பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]

Continue reading …

கமல்ஹாசனின் வலைபதிவு!

Comments Off on கமல்ஹாசனின் வலைபதிவு!

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரை போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அப்பதிவில் அவர், “வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் […]

Continue reading …

சிஏஏ தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்! முதலமைச்சர் அறிவிப்பு!

Comments Off on சிஏஏ தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம்! முதலமைச்சர் அறிவிப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது என்று அறிவித்துள்ளார். நேற்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இனம் மதம் ஆகியவற்றால் […]

Continue reading …

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

Comments Off on அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு […]

Continue reading …

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

Comments Off on காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளா?

காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று பிடிவாதமாக இருந்தது. திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் […]

Continue reading …

விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

Comments Off on விஜய் கட்சி குறித்து வேல்முருகன் கடுமையான விமர்சனம்!

தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் விஜய்யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்ததோடு, விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் வேல்முருகன் “சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு உறுப்பினராக சேர்க்க இணையதளமே பிளாக் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள், 50 லட்சம் என்று ஊடகத்தில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கூத்தாடிகளை கொண்டாடுகிற நிலையை உடைக்க வேண்டும், நான் […]

Continue reading …

கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

Comments Off on கமலை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள்; குஷ்பு பேட்டி!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேட்டி ஒன்றில், “தேர்தல் பிரச்சாரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றால் கூட்டம் வராது. கூட்டத்தை வரவழைப்பதற்கு கமல்ஹாசனை பிரச்சாரத்திற்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் திமுகவிற்கும் இடையே நடந்த உடன்பாட்டில் மக்களவைத் தேர்தலில் கமல் கட்சிக்கு சீட் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் 2025ம் ஆண்டு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு சீட் உண்டு என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் […]

Continue reading …

இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

Comments Off on இண்டி கூட்டணி குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் விமர்சனம்!

ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அனைத்து திருடர்களும் ஒன்று கூடி உருவாக்கிய கூட்டணி தான் இண்டி கூட்டணி என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இண்டி கூட்டணி பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், மோடியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த நிலையில் அக்கூட்டணிக்குள் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் மம்தா பானர்ஜி தன்னிச்சையாக மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார். காங்கிரஸ் கட்சியை அவர் ஒரு பொருட்டாக கண்டு கொள்ளவில்லை. […]

Continue reading …