Home » Archives by category » சென்னை (Page 3)

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது.

Comments Off on மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு இன்று  வேட்பாளர் நேர்காணலை தி.மு.க நடத்துகிறது. திமுக 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் இன்று நேர்காணல் நடத்துகிறது வேட்பாளர்களை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் நேர்காணல் நடத்துகிறார். தொகுதி நிலவரம் குறித்தும் வெற்றி வாய்ப்பும் குறித்தும் முதல்வர் கேட்டறிவார்

Continue reading …

*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*

Comments Off on *தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.*

*தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் நடிகர் அஜித்.* *கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்* *நடிகர் அஜித் காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பு ஒன்றில் வீக்கம் இருந்ததால் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.* *நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு இன்று நலமுடன் வீடு திரும்பினார் அஜித்.* *அடுத்த வாரம் வெளிநாட்டில் நடக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் அஜித் செல்ல உள்ளார் மேலாளர் சுரேஷந்திரா அறிவிப்பு.*

Continue reading …

திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

Comments Off on திடீரென தொகுதி மாறிய மன்சூர் அலிகான்!

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். திடீரென அவர் ஆரணி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது ஆரணியில் போட்டியிடப் போவதில்லை என்றும் மீண்டும் வேலூரில் தான் போட்டியிட போவதாகவும் மன்சூர் அலிகான் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், “ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய ஐந்து நாடாளுமன்ற […]

Continue reading …

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

Comments Off on திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது.

திருச்சியில் துரை வைகோ போட்டி. திமுக – மதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி முடிவுக்கு வருகிறது. மதிமுகவுக்கு  ஒரு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் திமுக வழங்க இருப்பதாக தகவல். இன்று நடந்த நிர்வாக குழு அவசர கூட்டத்தில் திமுகவிடம் 1+1 இடங்களை கேட்டு பெறுவது என மதிமுக தீர்மானம். அந்த வகையில் திருச்சியில் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. திமுக ஒதுக்கும் தொகுதியில் பம்பரம் அல்லது தனி சின்னத்தில் போட்டி […]

Continue reading …

ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; 

Comments Off on ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; 

காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக வருவதாக கூறி ரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள்; காலை நேரத்தில் 6.15 க்கு வர வேண்டிய மின்சார ரயில் 7.15 க்கு தாமதமாக வந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் வேதனை. காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் மறியல்.

Continue reading …

சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை தனியார் பள்ளிக்கு மீண்டும் குண்டு மிரட்டல்!

சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மீண்டும் சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முதுல் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியுள்ளது. இன்று முதல் 11-ம் வகுப்புகளுக்கும் தொடங்க உள்ளது. சென்னை கெருகம்பாக்கதில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து மாணவர்களை வீட்டுக்கு […]

Continue reading …

ஒரு தலை காதலால் கல்லூரி மாணவி கொலை!

Comments Off on ஒரு தலை காதலால் கல்லூரி மாணவி கொலை!

சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் ஒரு தலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்த அஸ்விணி, கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து அஸ்வினி அளித்த அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த அழகேசன், […]

Continue reading …

சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on சென்னை தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

திடீரென சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து இருபத்தி இரண்டு மணி நேரம் தொடர்ந்து போலீசார் தீவிர சோதனை செய்து வந்தனர். அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்றுக்கு தகவல் வந்தது. அச்செய்தி சேனல் தரப்பிலிருந்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். […]

Continue reading …

பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

Comments Off on பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து.

நாளை நடைபெறவுள்ள 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தைரியத்துடன் எழுத வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பாதுகாப்புடன் 875 வழித்தடங்களில் வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். 7.72 லட்சம் பேர் +2 பொதுத்தேர்வை நாளை எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Continue reading …

பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

Comments Off on பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய விமான நிலையம் அமைக்க, நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் […]

Continue reading …